4.6
Biographies
இந்திய பூமியில் ரிஷிகளும் சித்தர்களும் யோகிகளும் பதித்துச் சென்ற தடங்களின் தொகுப்பு நிகரற்றது. இந்தியப் பாரம்பரியத்தையும் மரபையும் பண்பாட்டையும் தொகுத்து நமக்களித்தவர்கள் இந்த யதிகளே. அவர்களது வாழ்வு வினோதமானது. ஒரு கால் உலகத்திலும் இன்னொரு கால் உணர்வு உச்சத்திலும் நிலைகொண்டு அலைபாய்வது. இந்த நாவல், துறவிகளின வாழ்க்கையை அதன் யதார்த்தத் தன்மையோடும் அதீத புனைவோடும் ஒருங்கே நம் கண்முன் கொண்டு வருகிறது. நம்மோடு உடன் பயணித்து, ஆனால் கண்ணில் படாமல் இருக்கும் ஒரு வாழ்க்கையைப் படிக்கும்போது நமக்குள் எழும் உணர்வுகள் அலாதியானவை. இந்தியக் கலாசாரத்தின் நுனி முதல் அடிவரை ஆழங்கால் பாய்ச்சிய ஒருவரால் மட்டுமே இத்தனை விரிவான ஒரு பிரதியை யோசிக்கவாவது முடியும். அது பாராவுக்குக் கை கூடியிருக்கிறது. பொதுவாகவே இந்தியக் கலாசாரத்தின் பின்னணியில் விரியும் எழுத்துகள் படிக்கக் கடினமானதாகவும், தத்துவப் பின்னணியில் புரியாத மொழியில் எழுதப்பட்டவையாகவும் இருக்கும். ஆனால் பாராவின் எளிமையான எழுத்து இச்சிக்கல்களைப் புறம் தள்ளி, வாசகனைத் தனக்குள் இழுத்துக்கொள்கிறது. நாம் அறியாத மரபானதொரு பேருலகினை, தகிப்பும் உக்கிரமும் ததும்பும் நவீன மொழியில் பதிவு செய்திருக்கும் யதி, தமிழ் புனைவுலகில் நிகழ்த்தப்பட்டிருக்கும் ஓர் அசுர சாதனை.
© 2024 Storyside IN (Audiobook): 9789355442727
Release date
Audiobook: 10 January 2024

Step into an infinite world of stories
Overall rating based on 32 ratings
Mind-blowing
Heartwarming
Thought-provoking
Download the app to join the conversation and add reviews.
Showing 10 of 32
நந்தகோபால் ரெட்டி
15 Mar 2024
திரு.இராகவன் அவர்களின் எழுத்துக்களின் மீதிருந்த நம்பிக்கை ஈர்ப்பு மற்றும் எதிர்பார்ப்பில் இப்புத்தகம் ஏமாற்றத்தையும் அவநம்பிக்கையையும் குழப்பத்தையும் தந்தது.இது ஒரு நாவலா அன்றி நடந்ததா,கற்பனையா அன்றி கண்டுணர்ந்ததா என்பதில் தெளிவில்லை.அமானுஷ்ய சக்திகளையும் அற்புதங்களையும் நம்பச்சொல்லி ஆண்டவனின் மீதான ஈர்ப்பை நகர்த்த முயல்கிறாரா என்பதிலும் தெளிவில்லை.புதிய நம்பிக்கையை தெளிவை ஏற்படுத்தும் எனும் எதிர்பார்ப்பை தொலைத்து தானும் தொலைந்து போயுள்ளார்.இது இராகவன் அவர்களின் இராக்கனவா என்கிற ஆழமான சந்தேகமே மிஞ்சி நின்றது.ஸ்டோரி டெல்லும் தன் மீதான நம்பிக்கையை தாரை வார்த்துள்ளது.
SundaraVadivel
29 Mar 2024
அற்புதம் இப்படியும் எழுத முடியுமா பிரமிப்பாக உள்ளது என்னுள் நிறைய மாற்றங்கள் பால்ய வயதிலிருந்தே படிக்கும் எனக்கு சமீப காலமாக பார்வை மங்கியதால் (62) ஆ டியோவில் கேட்கிறேன் ஸ்டோரி டெல் மிகப்பெரும் வரம் மேலும் வீரா அவர்கள் மாயாஜாலம் செய்திருக்கிறார் சொரிமுத்து வினோத் கேசவன் குரலில் எத்தனை மாற்றங்கள் ஏற்கனவே சின்னப்பழுவேட்டையர் கம்பீரக்குரலில் கலக்கியிருப்பார் தீபிகா அருண் அம்மா மாமி குரலில் முதுமை காட்டியிருக்கலாம் நன்றி நன்றி வாழ்க வளமுடன்
Sikkhi
2 Mar 2024
This author always blows my mind
Janani
18 Apr 2024
Excellent story and woven around a family of four sons and all of them take sainthood. The narrations are very good. As usual - The voice renditions from Veera and Deepika Arun add charm and life to this long story. At fewPlaces - one needs to reflect and rewind the chapters and I really liked it. Kudos to Pa. Raghavan for bringing up a story of this nature and the narrators for bringing life to the characters. 👏👏
Sridevi
11 Mar 2024
New experience about sanyasam
Arun
30 Jan 2024
Excellent book from Pa. Raghavan. Veera is masterpiece. He rocked with multiple modulations.
Srivathsan
10 Feb 2024
Another excellent book by Pa Ra sir. Orators did a great job. Many voice modulations. Hats off
Karthik
14 Feb 2024
நான் இதுவரை இப்படி ஒரு நூலை படித்ததில்லை, ஒரு வித்தியாசமான துறவர பயணக் கதை, பா ராகவன் அவர்களின் நூல்களில் இது புது வகை. மனித வாழ்வின் பல தத்துவங்களை கொண்ட ஒரு புத்தகம். 5 சித்தர்களின் வாழ்கை சம்பவங்களின் தொகுப்பு. 👍🏼👍🏼🙏🏼
Lalitha
26 Jan 2024
Great book and a excellent hearing experience.. You can't stop when started..❤️
BALAKRISHNAN
5 Feb 2024
நன்றி. தத்துவ பாடசாலையில் பாடம் கேட்பது போல் இருந்தது.. ஈர்ப்புடன் கேட்டேன்.. படைப்பிற்கு பாராட்டுகள்..குரல் பதிவு உச்சம்..இருவரும்...
English
India